ஐஸ்வர்யாராயுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை 22.01.08 
தனது புதியபடம் 'ரோபோ' வில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் அவருடன் பேச்சுவார்ததை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் - ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் த்ரிஷாவின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. படம் இந்தியிலும் வெளியாவதால் முதல் இரண்டு பேருக்கும் ஷங்கர் முக்கியத்துவம் அளித்துள்ளார் என அவரது அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
தீபிகா படுகோன் கேட்ட சம்பளம் மிக அதிகம் என்பதால், ஐஸ்வர்யா ராயிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த வருடம் ஐஸ்வர்யா ராய் இரண்டு பெரிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சனுடன் 'சர்க்கார் 2' படத்தில் நடிக்கிறார். இன்னொரு படம் 'காந்தி' திரைப்பட புகழ் பென்கிங்ஸ்லியின் 'தாஜ்மஹால்.'
இவ்விரு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளதால் ஷங்கர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது கேள்விக்குறிதான் என்கின்றன மும்பையிலிருந்து வரும் தகவல்கள்.
படம் தொடங்குவத்ற்குள் படத்தின் நாயகியை எப்படியும் தேர்வு செய்துவிடுவது என்பதில் முனைப்பாக உள்ளார் ஷங்கர். |