'வெள்ளித்திரை'யில் சந்தியா! 22.01.08 
'வெள்ளித்திரை' சினிமாவைப் பற்றிய கதை. பல நட்சத்திரங்கள் நடிகர்களாகவே இப்படத்தில் தோன்றுகிறார்கள். த்ரிஷாவைத் தொடர்ந்து சந்தியாவும் 'வெள்ளித்திரையில்' சின்ன வேடத்தில் நடிகை சந்தியாவாகவே வந்து போகிறார்.
இதற்கான ஷூட்டிங் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. சந்தியாவுடன் அரங்கில் காண முடிந்த இன்னொரு பிரபலம் இயக்குனர் பிரதாப் போத்தன்.
'வெள்ளித்திரை'யில் இயக்குனர் பிரதாப் போத்தன் 'காதல் கீதம்' என்றொரு படத்தை இயக்குவதாகவும், அந்தப் படத்தின் பூஜையில் சந்தியா கலந்து கொள்வதாகவும் காட்சி. இயக்குனர் விஜி, ஏவி.எம்.மில் அமைத்திருந்த பூஜை செட்டிங்கில் இந்தக் காட்சியை படமாக்கினார்.
சில முன்னணி நடிகர்கள் கெஸ்ட் அப்பியரன்ஸூக்கு ஒத்துக் கொண்டு கடைசி நிமிடத்தில் காலைவாரி விட்டார்களாம். சந்தியா மட்டும் சொன்னபடி வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜின் அடுத்த தயாரிப்பில் சந்தியாவை எதிர்பார்க்கலாமா? |