TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்தது ஏன்?
29.1.08







‘அரண்’, பீமா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி.

தமிழில் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற படத்தில்தான் நடித்தேன். பிறகு பீமாவில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்தேன். குடும்பப்பாங்காக நடித்திருந்ததாகப் பாராட்டுகிறார்கள், மகிழ்ச்சி. மலையாளத்தில் இதுவரை 18 படங்களில் நடித்திருக்கிறேன். பரதேசியில் மோகன்லாலுடன் நடித்தேன்.

அதைப் பார்த்து இந்தியில் துவா (புகை) என்ற படத்தில் வாய்ப்பு வந்தது. டாக்டர் முனாலினி என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். புரட்சிகரமான பெண் நிருபராக நடிக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பவர்களைப் பற்றி குறை சொல்ல விரும்பவில்லை. நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். முறைப்படி பரதநாட்டியம் கற்றிருக்கிறேன். குத்துப்பாட்டுக்கெல்லாம் ஆடச் சொன்னால் ஆட மாட்டேன். தமிழில் நல்ல வேடங்களில் நடித்து பெயர் பெற்றார் ரேவதி. அதுபோல் பெயர் பெற ஆசை.

அபியும் நானும் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க கேட்டனர். இயக்குனர் ராதாமோகன் சொன்ன கதை பிடித்திருந்தாலும் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு வயது ஆகவில்லை. அதனால் நடிக்கவில்லை. இவ்வாறு லட்சுமி கோபால்சாமி கூறினார்.
  © 2006 - 2007 TNLworld.com