TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இலியானா மறுப்பு
28.1.08







குசேலன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இலியானா மறுத்துவிட்டார்.

மலையாளத்தில் ஹிட்டான கதபறயும் போள் படத்தின் ரீமேக், குசேலன். இதில் ரஜினிகாந்த், பசுபதி நடிக்கின்றனர். பி. வாசு இயக்குகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

பசுபதி ஜோடியாக நடிக்க சிம்ரனிடம் பேசப்பட்டது. சில காரணங்களால் அவர் ஒப்பந்தமாகவில்லை. அந்த வேடத்தில் இப்போது தபு நடிக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை இலியானாவிடம் பேசப்பட்டது. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுவதால் இலியானா ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என வாசு

நினைத்தார். ஆனால் இதில் நடிக்க இலியானா மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வேடத்துக்காக நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ஏற்கனவே சந்திரமுகியில் ரஜினியுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார்.
  © 2006 - 2007 TNLworld.com