TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
'தசாவதாரம்' பாடல் - சோனி வெளியிடுகிறது
4.2.08







பிரபல சோனி BMG நிறுவனம் இசை வெளியீட்டில் சர்வதேச புகழ்பெற்றது. அந்நிறுவனம் தனது வியாபாரத்தை தென்னிந்தியாவரை நீட்டித்துள்ளது.

முதல்முறையாக 'தசாவதாரம்' பாடல்களின் உரிமையை வாங்கி தென்னிந்தியாவில் கால் பதித்துள்ளது இந்நிறுவனம். "அடுத்தமாதம் பிற்பகுதியில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இருக்கும்" என்றார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.

'தசாவதாரம்' பாடல்களை ரூபாய் இரண்டு கோடிக்கு சோனி BMG நிறுவனம் வாங்கியுள்ளது. படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டதற்கு ஏப்ரல் 10 வெளியிட திட்டமிட்டுள்ளதாக ரவிச்சந்திரன் கூறினார்.

'தசாவதாரம்' தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் படம் வெளியாகும் அதேநாள் தெலுங்கு, இந்தியிலும் படத்தை வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.
  © 2006 - 2007 TNLworld.com