TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
இங்கிலாந்தில் 'பீமா' முன்னிலை!
30.1.08







பாக்ஸ் ஆபிஸில் 'பீமா' படம் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டு வாரங்கள் முடிந்தநிலையில் சென்னையில் மட்டும் ஒன்றரை கோடிக்குமேல் 'பீமா' வசூலித்துள்ளது. வார இறுதி கலெக்ஷ்ன் முப்பத்தைந்து லட்சங்களுக்கும் மேல்! இது 'பீமா' வுக்கு அடுத்தபடியாகவரும் 'காளை'யை விட ஏறக்குறைய 25 லட்சங்கள் அதிகம்.

இங்கிலாந்திலும் இந்திப்படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது 'பீமா' 14 திரையிடல்களில் 39.49 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இது அமீர்கானின் 'Taare Zameen Par' படத்தின் சராசரியை விட அதிகம்.

'பீமா', 'Taare Zameen Par' படங்களுக்கு அடுத்தபடியாக 'Halla Bol' மற்றும் 'Welcome' படங்கள் வருகின்றன. ஐந்தாம் ஆறாம் இடங்களை 'காளை', 'பிரிவோம் சந்திப்போம்' படங்கள் பிடித்துள்ளன.

ஸ்கிரீன் சராசரியில் 'பீமா' முன்னணியில் இருந்தாலும், மொத்த கலெக்ஷ்னில் அமீர்கானின் படமே முதலிடத்தில் இருக்கிறது. வரும் வாரங்களில் 'பீமா'வுக்கு இங்கிலாந்து இந்தியர்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து ஒன்றாம், இரண்டாம் இடங்கள் மாற வாய்ப்புள்ளது.
  © 2006 - 2007 TNLworld.com