அஜித் வீட்டு குட்டி ஏஞ்சல் 17.1.08 
`வரலாறு' படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியாக ரூபாய் பத்து லட்சம் நடிகர் அஜித்துக்கு தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தர வேண்டியிருந்தது. தனது அடுத்த பட ரிலீஸின் போது அந்த பணத்தை செட்டில் செய்து விடுவதாக அஜித்திடம் சக்கரவர்த்தி, வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இப்போது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பான `காளை' படம் ரிலீசுக்கு முன்பு தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தருமாறு அஜீத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கமும் அஜித்திற்கு உரிய பணத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
தனது செல்லக் குழந்தையைக் கொஞ்சி மகிழும் அஜீத், 'ஜான்' என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறார். இந்தியில் 'ஜான்' என்றால், 'உயிரே' என்று அர்த்தம். இன்னும் முறைப்படி பெயர் வைக்கவில்லை. அதற்கான விழா விரைவில் நடக்கிறது.
இதற்கிடையே, இன்று ஹாங்காங் பறக்கிறார் அஜீத். ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜுசுந்தரம் இயக்கும் புதுப்படத்தின் சண்டைக் காட்சி அங்கு படமாகிறது. அதில் கலந்துகொள்ளும் அஜீத், வீடியோவில் குழந்தையைப் பதிவு செய்து லேப்டாப்பில் எடுத்துச் செல்கிறார். ஷாலினியின் குடும்பத்தார், தங்கள் வீட்டு வாரிசை, 'குட்டி ஏஞ்சல்' என்று கொஞ்சுகின்றனர். |