நயன்தாராவுக்கு டிமாண்ட்ஸ் 20.01.08 
யாராவது நடிக்கக் கூப்பிடுவார்களா என குழம்பி நிற்பது ஒருவகை. எந்தப் படத்தில் நடிப்பது என குழம்பி தவிப்பது இன்னொரு வகை.
நயன்தாராவுடைய குழப்பம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. 'பில்லா' வுக்கு பிறகு நயன்தாராவுக்கு ஏக டிமாண்ட்ஸ். 'யாராடி நீ மோகினி', 'சத்யம்' படங்களில் நடித்துவருகிறவருக்கு தெலுங்கிலும் பெரிய வாய்ப்புகள் வருகின்றன.
அதேநேரம் தமிழின் பெருந்தலைகளும் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுவருகிறார்கள். 'நான் அவன் இல்லை' படத்தின் இயக்குனர் செல்வா அடுத்து தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக ஒருபடம் இயக்குகிறார். மாதவன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.
அதேபோல் 'பொல்லாதவன்' வெற்றிமாறனும் தனுஷூம் அடுத்து இணைந்து உருவாக்கப் போகும் படத்துக்கும் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்க முடிவு செய்துள்ளனர்.ஒரே நேரத்தில் வந்த இந்த இரு படவாய்ப்புகளில் எதை ஒத்துக்கொள்வது என்பதில் நயன்தாராவுக்கு குழப்பம். குழப்பத்தின் முடிவு யாருக்கு சாதகமாகஇருக்கும் என இரு நடிகர்களும் காத்திருக்கிறார்கள். |