TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
News                                                           Email This Article To A Friend!
ஈராக்கில் 3 ஆண்டில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு
10.01.08







ஈராக்கில் அமெரிக்கா படையெடுப்பைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

என்றாலும் இது சரியான கணக்கெடுப்பா அல்லது ராணுவத்தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம், ஈராக்கில் வீடு வீடாகச் சென்று நடத்திய ஆய்வில் இந்த உயிரிழப்பு கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் சுமார் 6 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளில் ஏற்பட்டதா என்பது பற்றி தெரியவரவில்லை.

என்றாலும் அமெரிக்க அதிகாரிகள், ஈராக் பொதுமக்கள் மட்டும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  © 2006 - 2007 TNLworld.com