TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
News                                                             Email This Article To A Friend!
அமெரிக்க கோளால் பூமிக்கு ஆபத்து
29.1.08







விண்வெளியில் சுற்றி வரும் அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இக்கோள் அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் பூமி மீது விழக்கூடும் என்று கருதப்படுகிறது. எனினும் இச்செயற்கைக்கோள் குறித்த முழு விவரங்களை வெளியிடாமல் அமெரிக்க விஞ்ஞானிகள் ரகசியம் காத்து வருகின்றனர்.

செயற்கைக்கோளில் ஹைட்ராசின் என்ற ராக்கெட் எரிபொருள், விஷத்தன்மை வாய்ந்த ரசாயன திரவம் உள்ளது. பூமி மீது ராக்கெட் மோதும்போது இந்த ரசாயனத்தால் ஆபத்து நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன் ஓரிரு முறை விண்ணில் இருந்து செயற்கைக் கோள்கள் பூமி மீது விழுந்துள்ளன. அவற்றால் அப்போது எவ்வித ஆபத்தும் உண்டாகவில்லை.

எனவே தற்போது விழும் செயற்கைக்கோளை ஆபத்தின்றி வேறு திசைக்கு திருப்ப இயலுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதுதொடர்பான தகவல்களை அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு தெரிவித்து வருகிறது.

கடந்த 1979ம் ஆண்டு 78 டன் எடை கொண்ட 'ஸ்கைலேப்' என்ற செயற்கைக்கோள் பூமி மீது விழுந்தது. மேற்கு ஆஸ்திரேலிய கடற்பரப்பில் அது விழுந்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் 2000மாவது ஆண்டில் காம்ப்டன் காமா என்ற செயற்கைக்கோள் பூமியை நோக்கி வந்தது. விஞ்ஞானிகள் முயற்சியால் அது பசுபிக் கடலில் விழுந்தது.
  © 2006 - 2007 TNLworld.com