TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
News                                                           Email This Article To A Friend!
இ‌ந்‌தியா- மலே‌சியா இடை‌யில் ந‌ல்லுறவு
8.01.08







இ‌ந்‌தியாவுட‌‌‌‌ன் தற்போது ‌நீடித்து வரும் ந‌ல்லுறவு தொடர்ந்து வலு‌ப்பெ‌று‌ம் எ‌ன்று மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் ம‌த்‌திய‌ பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌‌ணி இ‌ன்று அ‌ப்து‌ல்லா படா‌வியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

சுமார் 40 ‌நி‌மிட‌‌ங்க‌ள் ‌நீடி‌த்த இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது, அர‌சிய‌ல் மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்த ப‌ல்வேறு ‌விஷயங்க‌ள் கு‌றி‌த்து இருவரு‌ம் ‌விவா‌தி‌த்ததாக‌த் தெ‌ரி‌‌கிறது.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களிடம் கூட்டாகப் பேசிய அந்தோணி, படாவி இருவரு‌‌ம், இ‌ந்‌தியா- மலே‌சியா இடை‌யிலான பாதுகா‌ப்பு ஒ‌த்துழை‌ப்பு, ராணுவ‌த் தளவாட வ‌ர்‌த்தக‌ம் ஆ‌கியவை தொட‌ர்‌ந்து வள‌‌‌ர்‌ச்‌சி பெறு‌ம் எ‌ன்று ந‌ம்‌பி‌க்கை தெர‌ி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் மலே‌சியா‌வி‌ற்கு‌ம் பாதுகா‌ப்பு‌த் துறை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு துறைகளில் ‌‌‌நீடி‌த்து வரு‌ம் ந‌ல்லுறவுக‌ள் ‌திரு‌ப்‌திய‌ளி‌ப்பதாகவு‌ம், இவை மேலு‌ம் வலு‌ப்பெறு‌ம் எ‌ன்று அப்துலா கூறினார்.
  © 2006 - 2007 TNLworld.com