எவரெஸ்ட் சாதனையாளர் ஹில்லாரி மரணம் 11.01.08 
நேபாளத்தை சேர்ந்த டென்சிங் நோர்கேயுடன் சேர்ந்து உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்டியவரான நியூசிலாந்தைச் சேர்ந்த சாதனையாளர் எட்மண்ட் ஹில்லாரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
நிமோனியாவால் எட்மண்ட் ஹில்லாரி அவதிப்பட்டு வந்ததாகவும், நேற்று அவர் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக பிறந்த உலக சாதனையை எட்டியவர் எட்மண்ட் இன்று அவரது மரணச் செய்தியை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் புகழஞ்சலி செலுத்தினார்.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த குணங்களுடன் நியூசிலாந்திற்கே பேருருவமாகத் திகழ்ந்தவர் என்றும், திட்டமிட்ட வாழ்க்கையுடன், அடக்கம், பெருந்தன்மையுடன் வாழ்ந்தவர் எட்மண்ட் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார். |