பெனசிர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு 12.01.08 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ (Benazir Bhutto) வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது.
லர்கானாவில் பெனசிர் வீடு உள்ளது. தனது தந்தை அலி பூட்டோ வாழ்ந்த இல்லத்தில்தான் பெனசிர் வசித்து வந்தார். மகன் பிறந்தவுடன் இந்த வீட்டிற்கு "பிலாவல் இல்லம்" என பெயரிட்டார். பாகிஸ்தானில் இருக்கும்போது பெனசிர் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில்தான் தங்குவார்.
பெனசிர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு இன்னமும் பெயர் முடிவு செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் மக்கள்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.
இது குறித்த அறிவிப்பை கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பெனசிர் மற்றும் அவரது தந்தைபூட்டோ பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் இடம்பெறும். தந்தை, மகள் இருவருமே பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர்கள். |