அணுசக்தி இந்தியா - சீனா இணைந்து செயல்பட முடிவு 15.01.08 
அணுசக்தித் துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது என்று இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
இந்த துறைகளில் நெருங்கிய, பொருளாதார பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் என்றும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளிலான வாய்ப்புகளின் பலன்களை இருநாடுகளும்அனுபவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாக, சீனப் பிரதமர் வென் ஜியாபாவோச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
சீனாவுடன் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சீன முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கு தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது என்றுமுடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2005 -ம் ஆண்டு சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வந்திருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் அவரது வருகைக்குப் பின் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார். பேட்டியின் போது சீனப் பிரதமரும் உடனிருந்தார். |