TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
News                                                           Email This Article To A Friend!
சல்மான்கானின் மெழுகுச்சிலை லண்டணில் இன்று திறந்து வைக்கப்பட்டது
17.01.08







இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபலமான தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது புதிதாக 43 வயது நடிகர் சல்மான்கானின் முழுஉருவ மெழுகுச்சிலை அங்கு வைக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் 5 கலைஞர்கள் 12 வாரங்களில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.

இந்த சிலையின் திறப்பு விழா நடந்தது. விழாவில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு தனது சிலையை திறந்து வைத்தார். சிலை மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அப்போது அவர் கூறினார். சல்மான்கானுடன் நடிகை கத்ரீனா கைபும் சென்று இருந்தார்.
  © 2006 - 2007 TNLworld.com