TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
News                                                           Email This Article To A Friend!
புஷ் மகளுக்கு திருமணம்
18.01.08







அமெரிக்க ஜனாதிபதி புஷ்-லாரா தம்பதியின் மூத்த மகள் ஜென்னாவுக்கும், அவரது காதலர் ஹென்றி ஹேகருக்கும் இடையே வருகிற மே மாதம் திருமணம் நடக்கிறது.

புஷ்சுக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான ஜென்னாவுக்கு 26 வயது ஆகிறது. அவர் ஹென்றி ஹேகர் என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஹென்றிக்கு 29 வயது ஆகிறது. இருவரும், ஒருவரை ஒருவர் காதலித்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. ஹென்றியும் குடியரசு கட்சி குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவர் கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் புஷ்சுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இவர்களின் திருமணம் வருகிற மே மாதம் 10 -ந்தேதி நடக்கிறது. இவர்களின் திருமணம் புஷ்சுக்கு சொந்தமான டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கிராபோர்டு நகரில் உள்ள ஆயிரம் ஏக்கர்பண்ணையில் நடக்கிறது. இதுபற்றி லாரா புஷ் எந்த விதமான கருத்தையும் கூறமறுத்து விட்டார். இது எளிமையான திருமணமாக இருக்கும் என்று புஷ்சுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
  © 2006 - 2007 TNLworld.com