முஷாரப்பை கொல்ல திட்டம் 20.1.08 
ஐரோப்பிய பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொலை செய்ய திட்டமிட்டதாக 14 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் இருவர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் முஷாரப் ஐரோப்பா வரும் போது அவரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி ஸ்பெயின் மற்றும் பர்சிலோனாவில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் பார்சிலோனாவில் 2 இந்தியர்கள் உட்பட பாகிஸ்தானை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றியுள்ளதாகவும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கைதான இந்தியர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு, இந்திய தூதரக அதிகாரிகள் ஸ்பெயின் அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். |