ஒசாமா தீவிரவாதத்தை கைவிட மகன் வலியுறுத்தல் 22.1.08 
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கய்டாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் தீவிரவாதத்தை கைவிட வேண்டும் என அவரது மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்த ஒசாமாவின் மகன் ஓமர் (26), தனது நியாயமான குறிக்கோள்களை அடைய வேறு வழிகளை கையாள வேண்டும் என்றார்.
இது தனது சொந்த கருத்து தான் எனக் கூறிய ஓமர், இதே கருத்தை தமது குடும்பத்தின் நலம் விரும்பிகளும் சமீபகாலமாக தன்னிடம் கூறி வருவதாக குறிப்பிட்டார்.
தனது தந்தையை கடந்த 2000-வது ஆண்டு கடைசியாக சந்தித்ததாகவும், உள்ளூர்வாசிகளின் ஆதரவு உள்ளதால் அவர் (ஒசாமா) எதிரிகள் கையில் சிக்க மாட்டார் என்றும் ஓமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடனின் முதல் மனைவிக்கு பிறந்த 11 குழந்தைகளில், ஓமர் 4வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது |