ஹாக்கி டெஸ்ட் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா 29.1.08 
பெல்ஜியம் அணியுடனான 3வது ஹாக்கி டெஸ்டில் இந்தியா 3&2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தியா, பெல்ஜியம் அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் போட்டி 4&4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா 5&0 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில், 3வது போட்டி நேற்று நடந்தது. பெல்ஜியம் வீரர் சார்லஸ் 6வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். ரகுநாத் 33வது நிமிடத்தில் பதில் கோல் அடிக்க, இடைவேளையின்போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
இந்தியாவின் திலீப் திர்க்கி 47வது நிமிடம் பெனால்டி கார்னரில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். பெல்ஜியம் வீரர் ஜெரோம் (63வது) அபாரமாக ரிவர்ஸ் பிளிக் செய்து கோல் அடிக்க 2&2 என மீண்டும் சமநிலை ஏற்பட்டது. அடுத்து இந்தியாவின் ராஜ்பால் சிங் ரிவர்ஸ் பிளிக் செய்து கோல் அடித்து (66வது) அசத்தினார்.இறுதியில் இந்தியா 3&2 என்ற கோல் கணக்கில் வென்றது. 4வது டெஸ்ட் நாளை நடக்கிறது.
|