சானியா தோல்வி! 20.01.08 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பரிவு 3வது சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலி ஓபன், மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்கானிஜ் வீனஸ வில்லியம்சை எதிர்த்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா மோதினார்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 7&6, 6&4 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டில் சானியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்த போதிலும் டைபிரேக்கரில் வீனசின் சர்வீஸ் அபாரமாக இருந்தது.
மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் அனா சக்வெட்சே, செவட்லனா குனட்சோவா (ரஷ்யா) இருவரும் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியுற்றனர். போலாந்தின்ராட்வாஸ்கா 6&3, 6&4 என்ற நேர் செட் கணக்கில் குனட்சோவாவை தோற்கடித்தார். ரஷ்ய இளம் வீராங்கனை மரியா கிர்லின்கோ 6&7, 6&1, 6&2 என்ற செட் கணக்கில்அனா சக்வெட்சேவாவை வீழ்த்தினார். |