TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Sports                                                           Email This Article To A Friend!
சானியா மிர்சா ஜோடி தகுதி
21.1.08







ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா & அலிசியா மோலிக் (ஆஸி.) ஜோடி தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபன்னா ஜோடி லியாண்டர் பயஸ் ஜோடியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்சிடம் (8வது ரேங்க்) கடுமையாகப் போராடித் தோற்ற இந்திய வீராங்கனை சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸி. வீராங்கனை அலிசியா மோலிக் & சானியா ஜோடி 2வது சுற்றில் ரஷ்யாவின் நடியா பெட்ரோவா & எலினா வெஸ்னினா ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இப்போட்டியில் சானியா ஜோடி 6&3, 5&7, 1&1 என சமநிலை வகித்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இப்போட்டி நேற்று தொடர்ந்து நடந்தது.

அபாரமாக விளையாடிய சானியா ஜோடி 3வது செட்டை 6&4 என்ற கணக்கில் கைப்பற்றியது. முடிவில் 6&3, 7&5, 6&4 என்ற செட் கணக்கில் வென்ற சானியா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) & ஷாகர் பியர் (இஸ்ரேல்) ஜோடியுடன் சானியா ஜோடி மோதுகிறது.

போபன்னா அபாரம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் & பால் ஹேன்லி (ஆஸி.) ஜோடியுடன் (5வது ரேங்க்) இந்தியாவின் ரோகன் போபன்னா & ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி மோதியது. பரபரப்பான இப்போட்டியில் போபன்னா & ராம் ஜோடி 6&3, 3&6, 7&6 (6) என்ற செட் கணக்கில் வென்று, கால் இறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்றது. மகேஷ் பூபதி (இந்தியா) & மார்க் நோலஸ் (பகாமாஸ்) ஜோடியும் 2வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அர்ஜென்டினா வீரர் நல்பாண்டியன் ஸ்பெயினின் கார்லோஸ் பெரேரோ உடன் மோதினார். இப்போட்டியில் பெரேரோ 6&1, 6&2, 6&3 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), மரியா ஷரபோவா (ரஷ்யா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
  © 2006 - 2007 TNLworld.com