ஆஸ்திரேலிய அணிக்கு வளர்ச்சி 22.1.08 
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகராக இதுவரை எந்த அணியும் வளர்ச்சி அடையவில்லை என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ஹைடன், வரும் 24ம் தேதி அடிலெய்டில் துவங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
இதற்கிடையில், அட்லெய்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியா தான் மிகச் சிறந்த டெஸ்ட் அணி என்றும், எங்களுக்கு நிகராக விளையாட கூடிய அணி சர்வதேச அளவில் இல்லை என்றும் கூறினார்.
இந்தியா 4வது டெஸ்ட்டில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் என தெரிவித்த அவர், பெர்த் டெஸ்டின் முடிவை இந்தியா மீண்டும் பதிவு செய்ய முடியாது என்றார்.
பெர்த் வெற்றிக்கு பின்னர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, சர்வதேச கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு நிகராக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், விரைவில் நம்பர்-1 இடத்தை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. |