ஷரபோவா, இவானோவிக் தகுதி 26.1.08 
ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிக் இருவரும் தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 2 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் செர்பியாவின் ஜெலினா ஜன்கோவிக் உடன் ஷரபோவா மோதினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஷரபோவா 6&3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்ற ஜன்கோவிக், 2வது செட்டில் மரியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
இறுதியில் ஷரபோவா 6&3, 6&1 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் செர்பியாவின் இவானோவிக் 0&6, 6&3, 6&4 என்ற செட் கணக்கில் ஹன்டுசோவாவை (ஸ்லோவகியா) வீழ்த்தினார்.
நடால் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் பிரான்ஸ் வீரர் சோங்கா உடன் முன்னணி வீரர் நடால் (2வது ரேங்க்) மோதினார். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், ஆஸி. ஓபன் தரவரிசையில் இடம்பெறாத சோங்கா 6&2, 6&3, 6&2 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு தகுதி பெற்றார். 22 வயது இளம் வீரரான இவர் உலக அளவில் 38வது ரேங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூபதி ஜோடி தோல்வி: ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி & மார்க் நோலஸ் (பகாமாஸ்) ஜோடி 4&6, 4&6 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக் & ஆண்டி ராம் ஜோடியிடம் தோற்று வெளியேறியது. |